மத்திய உணவுத்துறை அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர், அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், தலைநகர் பாட்னாவில் லோக்ஜனசக்தி கட்சியின் தொண்டர்களை ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் சந்தித்து பேசுவதாக இருந்தது.
அந்த சந்திப்பு கூட்டங்களை அவர் ரத்து செய்து விட்டார்.
‘’தனது தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாததால் பாட்னா வர இயலவில்லை’’ என லோக்ஜனசக்தி கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிராக் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வானுக்கு என்ன நோய் என்பதை சிராக் பஸ்வான் குறிப்பிடவில்லை.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]