கர்நாடக மாநிலம் பன்னர்கெட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 130 காட்டு யானைகள் புகுந்துள்ளன.
மழைக்காலத்தில் இங்கு விளையும் கேழ்வரகு, கொள்ளு ஆகிய தானியங்களை தின்பதற்காக, ஆண்டுதோறும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைகள் தமிழக வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டும் கர்நாடக காட்டு யானைகள் த,மிழக வனப்பகுதியில் ஊடுருவியுள்ளன.
தளி வனப்பகுதியில் 70 யானைகள் ஒரு கூட்டமாகவும், எஞ்சிய யானைகள் ஜவலகிரி வனப்பகுதியிலும் முகாமிட்டுள்ளன.
எனவே தளி மற்றும் ஜவலகிரி வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
‘ அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல வேண்டாம் .பொதுமக்கள், சூரிய உதயத்துக்கு பிறகே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். சூரிய அஸ்தமனம் ஆகும் போது வீடு திரும்பி விட வேண்டும்’’ என வனத்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
’’யானைகள் புகுந்துள்ள இந்த இரு வனப்பகுதிக்குள், கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக யாரும் செல்லக்கூடாது’’ என்றும் அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.
-பா.பாரதி.