மருத்துவர்கள் பலர் கொய்யாய் காயின் இலையை ஆராய்ச்சி செய்து, அது டெங்கு காய்ச்சலை மட்டும் குணமாக்கவல்லது அல்ல, அதில் உள்ள வைட்டமின் B சத்து, தலைமுடி உதிர்வதை முழுமையாக தவிர்த்து அதிக அளவில் முடி வளர உதவுவதாக கூறியுள்ளனர்.
ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதில் கையளவு கொய்யாய் இலைகளைப் போடுங்கள். பின்பு 20 நிமிடம் கொதிக்கவிடுங்கள். ஆறவைத்த பிறகு, வடிகட்டி அந்நீரை (மருந்தை) உச்சந்தலையில் மசாஜ் செய்வது போல் தேயுங்கள். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து தலைக்கு குழியுங்கள்.
அதிக பயனுக்கு அந்நீரை தலையில் தடவிய பிறகு, ஒரு இரவு முழுதும் ஷவர் காப் போட்டுக்கொண்டு, காலையில் குழியுங்கள். இந்த சிகிச்சை முறையால் தலை முடியின் வேர் வரை மருந்து சென்று குனமளிக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள்.
ட்ரை பண்ண ரெடியா?
-ஆதித்யா