அறிவோம் தாவரங்களை அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி .(Euphorbia hirta)

தமிழகம் உன் தாயகம்!

உன் விதைகள் அரிசி குருணைப் போல் இருப்பதால் நீ பச்சரிசி ஆனாய்.தாய்ப்பால் பெருக்கும் உணவு நீ.

ஆகையால் அம்மான்பச்சரிசி ஆனாய். வேலிகள்,

நடைபாதைகள், சாலையோரங்கள்,

நீர் ஆதாரப் பகுதிகளில் தானே வளரும் தேன் செடி நீ! மூன்று அங்குலம் நீளம் படரும் பசுமைக் கொடி நீ!சித்திர வல்லாதி,சித்திர பாலாவி, சித்திரப்பாலாடை எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் படர்கொடி நீ!சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் செம்மைக் கொடி நீ! பூண்டு வகையைச் சேர்ந்த புனிதக் கொடி நீ!முகப்பரு,முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ,தாய்ப்பால் சுரப்பு, இருமல், சளி, ஆஸ்துமா, உடல் வலிமை, காயங்கள், மலச்சிக்கல், வீக்கம், கொப்புளங்கள், வாய்ப்புண், நாக்குப் புண், குடல்புண், மரு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ! சமஸ்கிருதத்தில் நீ ‘டுக்திக்கா!.’

ஹிந்தியில் நீ ‘டுதி!’ தெலுங்கில் நீ ‘ரெட்டின் ரரோலு’! மலையாளத்தில் நீ ‘நீலபாலை’ !

மெல்லிய தண்டை உடைய  மேன்மைக் கொடியே! தரையோடு படரும் தங்கக் கொடியே!ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் கீரைக்

கொடியே! சட்னி,துவையல் தயாரிக்கப் பயன்படும் சத்துக்கொடி! ஆண்மை சக்தியை அதிகரிக்கும் அற்புதக் கொடியே! துவர்ப்புச் சுவைக் கொண்ட தொன்மைக் கொடியே! குளிர்ச்சியைக் கொடுக்கும் கொடைக் கொடியே! நீவிர் நலமுடன் வளமுடன் வாழ்க! வளர்க உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.