சென்னை
நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களில் 2 மணி நேரத்துக்கு தொடர் கன மழை பெய்தது.
இதில் கிண்டி, ராயப்பேட்டை, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் குளிர்ச்சியான வெப்ப நிலை காணப்பட்டது.
மேலும் வானிலை ஆய்வு மைய தகவலின்படி சென்னை,காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel