டெல்லி: இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக, போக்குவரத்து ஓரளவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் முதல் பாதியில் நாடு முழுவதும், 1,60,000 விபத்துக்கள் நடைபெற்று இருப்பதாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 35 சதவிகிதம் இது குறைவு என்றும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதுபோல, விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதமும் 30 சதவிகிதம் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.