சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் ஆண்டு அவர் விடுதலை ஆவார் என்று ஆர்டிஐ மூலம் தகவல் வெளியானது.

அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராத தொகையை அவர் செலுத்தா விட்டால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் தமக்கான அபராத தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுவை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமது அபராத தொகையான 10 கோடியை சுதாகரன் நீதி மன்றத்தில் செலுத்தி விட்டார். இதனை தொடர்ந்து, தற்போது சசிகலாவும் அவரது தொகையை செலுத்த மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான நடவடிக்கை என்ன என்பது விரைவில் தெரிய வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

[youtube-feed feed=1]