’’பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை’’ -தொல். திருமாவளவன் திட்டவட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்’’ அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பா.ம.க.வுடன் தேர்தல் உடன்பாடு வைப்பதற்குச் சாத்தியக்கூறுகளே இல்லை’’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘சில சாதக-பாதகங்களைக் கருத்தில் கொண்டு, ஆழமாகச் சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்’’ என்று குறிப்பிட்ட திருமாவளவன்’’ பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது துரதிருஷ்டவசமானது- முட்டாள் தனமானது’’ என்றார்.
‘’தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் நான், பா.ம.க.நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாசுடன் 5 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினேன்.. அவருடன் எனக்குத் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது’’ என்று குறிப்பிட்ட திருமாவளவன்’ தேர்தலில் எப்போதெல்லாம் பா.ம.க.தோல்வி அடைகிறதோ அப்போதெல்லாம் அவர் ஜாதி அரசியலைக் கையில் எடுக்கிறார்’’ என்று குற்றம் சாட்டினார்.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]