பீகார்: பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அம்மாநிலத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை மொத்தம் ரூ.541 கோடி மதிப்பில் காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களில், 4 நீர் வழங்கல் திட்டங்கள், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் உள்ளன.
ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் என்று மற்றொரு திட்டமும் இதில் அடங்கும். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய பொறியாளர்கள் நமது நாட்டின் மீதான வளர்ச்சியில் அதி தீவிரமாக உள்ளார்கள்.
இது நாம் பெருமிதம் கொள்ளும் விஷயமாகும். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பான நடவடிக்கைகளினால் பீகாரில் குடிநீர், கழிவு நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுகின்றன. நமது பொறியாளர்கள் நாட்டையும், உலகையும் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றி உள்ளனர் என்று பேசினார்.