சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதியக் கல்விக்கொள்கை குறித்து விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியஅரசின் நடவடிக்கையால், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளானஇன்று, இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சியை காக்க உறுதியேற்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமொழிக்கொள்கைக்கு தீர்மானம் கொண்டு வந்தவர் அண்ணா. அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் தற்போது, ஆபத்து வந்துள்ளது. அதை அனைவருமே ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.