லடாக்
சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் இன்னும் பதற்ற நிலை நீடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
லடாக்கை ஒட்டிய கிழக்குப்பகுதியின் எல்லைக் கோட்டில் சீனப்படைகள் குவிக்கப்பட்டன. அதையொட்டி பதிலடியாக இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. அதன் பிறகு பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இரு தரப்பிலும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனப்படையினர் நடத்திய திடீர் தாக்குதலால் இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததையொட்டி கடும் பதட்டம் ஏற்பட்டது.
இரு தரப்பிலும் சுமுக நிலையை உண்டாக்க அமைச்சர்கள் தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் முடிவில் 5 அம்ச திட்டம் ஒன்று வெளியிடப்பட்டது. ஆயினும் சீனா தனது பக்கத்தில் நிறுத்தியுள்ள படைகளை குறைக்காமல் உள்ளது,. கடந்த 4 மாதங்களுக்குள் சீனப் படைகள் அத்துமீறி இந்தியாவில் புக முயன்றதை இந்தியப் படைகள் முறியடித்துள்ளன.
இதனால் எல்லை பகுதியில் இந்தியப்படைகள் குவிப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. எனவே இரு தரப்பிலும் கடும் பதட்ட நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் எல்லை நிலவரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.