சென்னை:
கொரோனாவை பொருட்படுத்தாமால் நீட் தேர்வில் 85% மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
பல இன்னல்களுக்கு இடையில் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது, இளங்கலை நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வருகை 85% – 90% வரை இருந்தது என்று தேசிய சோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்து, தேர்வெழுதும் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் நீட் மருத்துவ கமிஷன் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, இதன் அடிப்படையில் இனி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மற்றும் ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் அறிவியல் நிறுவனம் (JIPMER) நிறுவனங்கள்  இனி நீட் தேர்வு மூலமாகவே சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த வருடம் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டிருந்தனர். கடந்த வருடம் 15. 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டு 92.9% மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பல இன்னல்களுக்கு நடுவில் நீட் தேர்வு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது, தேசிய சோதனை நிறுவனத்தின்  புள்ளி விவரப்படி இந்த வருடம் 85%-90% வரை மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர் என்று நொய்டாவில் உள்ள தேசிய சோதனை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நீட் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, அசாமிஸ், தமிழ், கன்னடா, மராத்தி, ஒடியா மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. தேசிய சோதனை நிறுவனத்தின் ஆரம்ப அறிக்கைப்படி 77% மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்வெழுதியுள்ளனர், மேலும் 12% மாணவர்கள் ஹிந்தியிலும், 11% மாணவர்கள் மற்ற பிற மொழிகளிலும் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.