டெல்லி: உலக அளவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியிருப்பதாக  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

உலககெங்கும் கோவிட் 19 தரவுகளைத் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்து வருகிறது. அதன் தரவுகளின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவில் இருந்து 37,80,107 பேர் மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தரவுகளின் படி உலகெங்கிலும் 19,625,959 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் வழக்குகளின் எண்ணிக்கை 29,006,033 ஆகும். அதேபோன்று உலகளவில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,24,105 ஆகும். கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடத்தில் (37,80,107) உள்ளது. பிரேசிலில் (37,23,206), அமெரிக்காவில் (24,51,406) தொற்றுகளும் பதிவாகி உள்ளன.

மத்திய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்தியாவின் மீட்பு விகிதம் 78 சதவீதத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77,512 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 37,80,107 பேர் குணம் பெற்றுள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (27,93,509) கிட்டத்தட்ட 28 லட்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை 60 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.