35 வயது டிரைவருக்கு 15 வயது மாணவியை கல்யாணம் செய்து வைத்த கொடுமை..
மத்தியப்பிரதேச மாநிலம் குணா பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு 15 வயதில் அவர், அனுமதி இல்லாமல் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவியின் தந்தை இறந்து விட்டதால்,அவரது தாயார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அந்த வளர்ப்பு தந்தை, மாணவியை லாரி டிரைவர் ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். அப்போது மாணவிக்கு 15 வயது தான். 35 வயதான அந்த டிரைவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, மாணவிக்குக் கட்டாய கல்யாணம் செய்து வைத்த நிலையில், ’’கணவரான’’ டிரைவர் மிருகத்தனமாக நடந்துள்ளார்.
இதனால், அந்த மாணவி ‘’கணவனை’’ விட்டுப்பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
ஆனால் டிரைவர் அவ்வப்போது மாணவியின் இல்லத்துக்கு வந்து,தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மிரட்டி வந்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி போபாலில் உள்ள,’குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தைகள் நல கமிட்டி’யிடம் புகார் செய்துள்ளார்.
விவரம் தெரியாத வயதில் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். =-பா.பாரதி.