சென்னை:  `நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாடாளுமன்றம் முன்பு திமுக – கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்து உள்ளது. முன்னதாக, நீட் தேர்வு அச்சம் காரணமாக, தமிழகத்தில் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வை  தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.

நாடாளுமன்றம் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ், கம்யூ. கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர் என நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.