மும்பை: மாநில அரசை விமர்சித்ததற்காக, சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரியான மதன்சர்மா, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் பதவியிலிருந்து விலகுங்கள் என உத்தவ தாக்கரேக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் உத்தவ்தாக்கரே தலைமையில் சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசேனா குறித்து கார்டூன் வெளியிட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன்சர்மா, சிவசேனா தொண்டர்களால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்டார். இதில் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்தது.
இதையடுத்து, மத்தியஅரசு கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், தாக்கரே அரசு மீது சமூக ஆர்வலர்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். தாக்கரே அரசு பதவி விலக வலியுறுத்தி சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த மதன்சர்மா, மாநிலத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில், உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவி எதற்கு? முதல் மந்திரி பதவியில் இருந்து உடனே விலகுங்கள் என காட்டமாக கூறினார்.
மேலும், நான் குண்டர்களால் தாக்கப்பட்டு, கடுமையாக காயமடைந்து உள்ளேன். மன உளைச்ச லில் உள்ளேன். நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது. இந்த விஷயத்தை யார் கவனிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.
அவர்கள் (சிவசேனா கட்சியினர்) என்னையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தின ரையும் துன்புறுத்தக் கூடும். அதனால், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உத்தவ்தாக்கரேஜியின் அனைத்துத் தொண்டர்களும் மற்றும் அமைப்பினரும் இதுபோன்ற தாக்கு தல் சம்பவம் வேறு யாருக்கும் மீண்டும் நடக்காது என்பதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யதைத் தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கூறப்படும் சிவசேனா தொண்டர்களான கம்லேஷ் கதம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.