சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் இன்று திறக்கப்பட்டு, இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்குஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஐந்தரை மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத் தலங்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 7ந்தேதி முதல் வழிப்பாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel