சென்னை: கரூர் மருத்துவ கல்லுாரியில், , துணை மருத்துவ படிப்புகளுக்கு, 130 இடங்களை மத்தியஅரசு ஒதுக்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 2020 – 21ம் கல்வியாண்டில், துணை மருத்துவ படிப்புகளுக்கு, 130 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி,
இரண்டு ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்புக்கு, 50 இடங்கள்;
ஒரு ஆண்டு டயாலிசிஸ் டெக்னீசியன் படிப்புக்கு, 20 இடங்கள்
ஒரு ஆண்டு மயக்கவியல் டெக்னீசியன் படிப்புக்கு, 20 இடங்கள்;
ஒரு ஆண்டு அறுவை சிகிச்சை அரங்க டெக்னீசியன் படிப்புக்கு, 20 இடங்கள்;
ஒரு ஆண்டு அவசர சிகிச்சை டெக்னீசியன் படிப்புக்கு, 20 இடங்கள்
என மொத்தம 130 இடங்கள் உள்ளன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.