இவர்கள் அங்கு சமீபத்தில் கொலை செய்யப்பட்ட, தேசிய நுண்ணறிவு அமைப்பின் ஊழியர்களுடைய புனைப் பெயர்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக துருக்கி அரசு அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. இது தொடர்பான வழக்கு இஸ்தான்புல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது, பத்திரிகையாளர்கள், அரசின் ரகசியத்தை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக பரபரப்பான விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில்,பேரிஸ் டெர்கோக்லு, எரன் எகின்சி ஆகிய 3 பேர் குற்றமற்றவர்கள் என கூறி கோர்ட்டு விடுதலை செய்து விட்டது. மற்ற 5 பேர்களும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து அவர்களுக்கு தண்டனை அறிவித்தது.
பேரிஸ் பெஹ்லிவன் மற்றும் ஹூல்யா கிலிங்க் ஆகிய இருவருக்கும் தலா 45 மாதங்கள் சிறைத்தண்டனையும், முரார் அகிரல், பெர்ஹட் செலிக் மற்றும் அய்தின் கெசர் ஆகிய 3 பேருக்கு தலா 56 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. எரிக் அகாரர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.