வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் நலமுடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ஏப்ரல் 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கிம் உடல்நிலை கவலைக்கிடமானதாகவும், சுய நினைவின்றி கோமா நிலைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
அவரது பதவிக்கு சகோதரி கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டு ஆட்சி பொறுப்பில் அமருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கிம் நலமுடன் இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கிம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.