சென்னை: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை,  விரும்பும்  மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வின் பாதிப்புகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையை நீட்  நுழைவுத் தேர்வு உருவாக்கி இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்து சென்டாக் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.

மாணவர் விரோத போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.  புதுச்சேரியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

[youtube-feed feed=1]