சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், பேரவை தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏகளுக்கு அரசு மாஸ்க் வழங்க வேண்டும் என திமுக துரைமுருகன் வலியுறுத்தி யுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார். அதன்படி, வருகிற 14ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை, பேரவைக் கூட்டம், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
முதல்நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. தொடர்ந்து கூட்டம் நடைபெறும்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன், பேரவை தொடர்களில் கலந்துகொள்ளவுள்ள எம்எல்ஏ, பத்திரிக்கை யாளர்களுக்கு அரசு மாஸ்க், கிருமிநாசினி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel