டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு பணிக்கு நேபாளத்தின் திகயான் பகுதியை சேர்ந்த தேக் பகதூர் தபா என்பவர் பணி அமர்த்தப்பட்டிருந்தார். இந் நிலையில், கோர்கா ரைபிள்ஸ் படையினருக்கான விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடும் முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான எந்த கடிதமும் அவர் எழுதி வைக்கவில்லை. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]