வாஷிங்டன்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 13ம் தேதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
பேச்சுவார்த்தையின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமூக உறவை வைத்து கொள்வது, இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. அதன் எதிரொலியாக இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக ஜனவரியில் தீர்மானம் ஒன்றை அமெரிக்க அதிர் டிரம்ப் கொண்டு வந்து இருந்தார்.
அதே நேரத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே, வரும் 15ம் தேதி உறவை இயல்பாக்கும் வகையில் மத்திய கிழக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியை அதிபர் டிரம்ப் நடத்துவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது.
இந் நிலையில், 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவியதற்கு அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றமானது, நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரைத்துள்ளது.