வாஷிங்டன்: ஈராக்கில் அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மத்திய தரைக்கடல் நாடான ஈராக்கில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விதமாக,  ஈராக் அரசுடன் இணைந்து, அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்காக அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தி வருகிறார் தற்போதைய அதிபர் டிரம்ப். அதன் ஒரு பகுதியாக, ஈராக்கில் அமெரிக்க படைகளை வாபஸ் பெற இருக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, மைக் பாம்பியோ கூறி இருப்பதாவது: ஈராக்கில்  அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் தீவிரவாதம்  குறைந்தால் மட்டுமே அமெரிக்க படைகள் முழுமையாக நாடு திரும்பும் என்று கூறினார்.

அண்மையில் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி சுலைமானி, அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் உண்டான கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.