தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் நடப்பு சங்க தலைவர் பாரதிராஜா மற்றும் 40க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து தியேட்டர் அதிபர்களுக்கு நேற்று சில கோரிக்கை விடுத்தனர், விபிஎஃப் கட்டணம், விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவு , தியேட்டரில் படங்களை ரீ ரிலீஸ் செய்வது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை மாற்றக்கூடாது. போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டதுடன் இதில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் புதிய படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம். அது பற்றி உறுப்பினர் களுடன் ஆலோசித்துவிட்டு பதில் தரவேண்டும் என்று அறிவித்தனர்.
இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:
தயாரிப்பாளர்கள் தியேட்டரில் படங் களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்கி றார்கள். அவர்கள் பணம் போடு எடுக்கும் படம் அதை ரிலீஸ் செய்வதும் செய்யா மல் இருப்பதும் அவர்கள் விருப்பம்.
உங்களுக்கு ஒடிடி என்று வழியிருந்தால் ஐபிஎல் மேட்ச் காட்டுவது, கல்யாண மண்டபமாக்குவது என்று எங்களுக்கு வேறு வழி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் விபிஎஃப் பணம் கட்டுவது பற்றி தெரி யாது. சேவை வழங்குபவர்கள்தான் (Service Providers) தான் எங்களுக்கு படங் களும் (content) தருகிறார்கள்.
தயாரிப் பாளர்கள் ஆரம்ப காலத்தில் பிரிண்ட் போட்டு நேரடியாக தியேட்டர்களுக்கு படம் கொடுத்தார்களோ, அதே போல் Service Providers-ம் கொடுக்கிறார்கள். ஓடிடி தளங்களிலோ, டிவியால் ஹீரோவை உருவாக்க முடியாது. தியேடர்கள்தான் ஹீரோவை உருவக்கும். அப்போதான் நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்க முடியும். தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாது.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.