பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 7,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னமும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 7,866 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்புகள் 4,12,190 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 146 பேர் பலியானக மொத்த உயிரிழப்பு, 6,680 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,803 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆகையால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,08,573 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 96,918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

[youtube-feed feed=1]