லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள என்டிபி என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒரு சுய-மின்னேற்றி பேட்டரியை, ஒரே சார்ஜில், 28000 ஆண்டுகள் வரை இயக்கலாம் என்ற ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

கார்பன்-14 (C14) நியூக்ளியர் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்டு, செயற்கையான டயமன்ட்-உறைப்பெட்டியில் வைக்கப்பட்ட இந்த பேட்டரியை, எலக்ட்ரிக் வாகனங்கள், மொபைல் ஃபோன்கள், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், ட்ரோன்கள், கடிகாரங்கள், கேமராக்கள், ஆரோக்கிய சரிபார்ப்பிகள் மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட பலவற்றிலும் பயன்படுத்தலாம்.

இந்த பேட்டரி, ரேடியோஆக்டிவ் எதிர்ப்பு டயமண்ட்டில் செய்யப்பட்டிருப்பதால், இதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதில், கதிரியக்க கசிவுகள் எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை டயமண்ட்-உறைப் பெட்டியில், கதிரியக்க சிதைவின் மூலமாக சிதறும் மற்றும் சேகரமாகும் எலக்ட்ரான்களின் மூலம், இந்தப் பேட்டரி மின்சாரத்தை தானே சுயமாக தயாரித்துக் கொள்ளும் தன்மையுடையது என்று கூறப்பட்டுள்ளது.