ஜெனிவா: நோய்த்தொற்று என்பது வரலாற்றில் வழக்கமானது. எனவே, இந்த உலகம் அடுத்த நோய்த்தொற்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ்.

உலகளவில் இதுவரை 27.19 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 888326 என்பதாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கூறியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், “இது கடைசி தொற்றாக இருக்காது. தொற்றுநோய்கள் என்பவை வாழ்க்கையின் அங்கம் என்று வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

எனவே, அடுத்த நோய்ப் பரவல் நிகழும்போது, அதை எதிர்கொள்வதற்கு, இப்போதிருப்பதைவிட, பெரியளவில் உலகம் தயாராக இருக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.