டெல்லி: லடாக் எல்.ஏ.சி. விவகாரம் மிகவும் சீரியஸ் ஆகிக்கொண்டிருக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
லடாக் மோதலுக்கு பிறகு, இந்தியா – சீனா இடையே பதற்றம் தொடர்ந்து வருகிறது. ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும், சீனா எல்லைப்பகுதியில் இருந்து ராணுவத்தை அகற்ற மறுத்து, மேலும் படைகளை குவித்து வருகிறது.
இதனால், லடாக்கில் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.
இந்த பரபரப்பான சூலில், இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 4 நாள் பயண மாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படைகளின் நிலைகள் ‘மிகவும் சீரியஸ்’ ஆகிக்கொண்டிருப்பதாகவும், ‘அரசியல் மட்டத்தில் ஆழமான உரையாடல் அவசியம்’ என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், செப்டம்பர் 10ம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சரகள் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்திப்போன் என்றும், அப்போது, “30 ஆண்டுகளாக எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவியது, இதுதான் உறவுகள் மேம்பாடு அடைந்ததுக்கும் காரணம்” ஆனால், தற்போதைய நிலைமை சீரியஸாகிக்கொண்டிருக்கிறது, அமைதி நிலவ பேச்சு வார்த்தை தேவை என்று கூறுவேன் என்றார்.
மேலும், இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து தூதரக கமிஷன் கூட்டத்தை நடத்தும் என்றும் என்று கூறியவர், வங்கதேச வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல் மோமெனுடன் நல்ல உரையாடல் நடந்தது என்றும் அப்போது இந்த இணைக்கூட்டத்துக்கு அவர் வரவேற்பு அளித்தார் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நம் தலைவர்கள் இலக்கு வைத்த லட்சியார்த்த குறிக்கோள்களை அடைய இரு நாடும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று தன் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது. இதில் இரண்டு நாடுகளும் மாறி மாறி புகார் வைத்தது குறிப்பிடத்தக்கது.. இந்த பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் எட்டப்படாத நிலையில் தற்போது அமைச்சர் ஜெய்சங்கர் சீன அமைச்சர் உடன் மீட்டிங் நடத்த இருப்பது குறிப்படத்தக்கது.