சென்னை: சபைக்கு வரும் இளம்பெண்களிடன் போன் நம்பரை பெற்று அவர்களிடம், ஆபாசமாக பேசியதாக கோத்தகரி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேணு முடியகம்பை கிராம பகுதியில் கிறிஸ்துவ மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன். இவர் அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி, மதப்பிர சாரம் செய்து வருகிறார்.
இவரது சபைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வது வழக்கம். இவர்களில், பல இளம்பெண்களிம் உதவி செய்வதாக கூறி செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அவர்களின் செல்போனில் தொடர்புகொண்டு, ஆபாசமாகவும், அசிங்க மாகவும் பேசியதாகவும், ஆசை வார்த்தை பேசி, அவர்களை பாலியல் ரீதியாக தன்வசப்படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில பெண்களிடம், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரிக்கத்தொடங்கிய நிலையில், பெண்கள் சிலர் சேர்ந்து, அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போதகர் அசோக் ஸ்டீபனை ரகசியமாக கண்காணித்து வந்த காவல்துறையினர், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கவனித்தனர். அதிரடி விசாரணையின்போது, தான் பல பெண்களிடம் ஆபாசமாக பேசியதும், பலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அசோக் ஸ்டீபனை கோத்தகிரி போலீசார் கைது செய்து குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.