டெல்லி: கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்களுடன் மத்தியஅரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் 5முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடைமுறைகள் தொடங்கி உள்ளது. அனைத்து கடைகளும், போக்குவரத்து சேவைகளும், சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகளும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தியேட்டர்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்பட வில்லை.
இந்த நிலையில், சினிமா விநியோகஸ்தர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் தியேட்டர் உரிமையாளர்கள், தியேட்டர்களை திறக்க அனுமதி கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலை யில், இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து அவற்றின் உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு காணொலி முறையில் கூட்டத்தை நடத்துகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்களும் பங்கேற் கின்றனர்.
இந்த கூட்டத்தில், திரையரங்குகளை மீண்டும் திறந்தால் பாதுகாப்பான முறையில் நடத்துவதற் கான வழிமுறைகள் என்னென்ன, திரையரங்கு டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை, பார்வை யாளர்கள், மற்றும் சமூக இடைவெளி உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் திரையரங்குகளை திறப்பது குறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், காணொலி மூலமாக இன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது.