புதுடெல்லி:
தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டு 23.4 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமாக 1,39,123 பேரில் 32,563 தினக்கூலி பெறுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளி விவரத்தில் தினக்கூலி பெறும் விவசாயிகள் சேர்க்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் தினசரி கூலி பெறுபவர்கள் 5,186 பேரும், மகாராஷ்டிராவில் 4128 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,964 பேரும், தெலுங்கானாவில் 2,858 பேரும், கேரளாவில் 2,809 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2019-ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் இல்லத்தரசிகளின் தற்கொலை விகிதம் 15.4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை விட, தினசரி கூலி வேலை பார்ப்பவர்கள் தற்கொலை விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் 3.1% மட்டுமே விவசாயிகளாவர்.
தேசிய குற்றப் பதிவுகள் இந்த தற்கொலைகளை 2014 -ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிறது, அப்படி ஒப்பிட்டு பார்க்கும்போது 2015இல் தற்கொலைகள் 17.8% உயர்ந்துள்ளது, 2016இல் 19.2% உயர்ந்துள்ளது, 2017 22.1% உயர்ந்துள்ளது, மேலும் 2018இல், 22.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடமான 2019-ல் 23.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுகள் இந்த தற்கொலைகளை ஒன்பது பாகங்களாக பிரிக்கின்றன: அதில் தினசரி கூலி வேலை செய்பவர்கள், இல்லதரசிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சம்பள நபர்கள், மாணவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வேலை அற்றவர்கள் என்று பட்டியலிடுகிறது.
இந்த கணக்கு தற்கொலை செய்து கொண்டவர்களின் வேலையை மட்டுமே குறிக்கிறது. மற்றபடி அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று காரணத்தை தரவில்லை.
வேலை இல்லாதவர்களின் தற்கொலை விகிதம் கடந்த ஆண்டு 10.1% உயர்ந்துள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் விகிதம் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது