புதுடெல்லி: லடாக் பகுதியில் கடந்தவாரம் கன்னிவெடி தாக்குதலில் மரணமடைந்த இந்திய சிறப்பு எல்லைப் படையின்(SFF) வீரரும், திபெத் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்தவருமான இமா டென்ஜினின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அவர் மரணமடைந்த அந்த சமயத்தில்தான், பேங்காங் ஏரியின் தெற்கு கரையை ஆக்ரமிக்க முயன்ற சீனாவின் முயற்சியை இந்தியப் படைகள் முறியடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் உடல், இந்திய & திபெத் கொடிகளால் போர்த்தப்பட்டிருந்தது. இவரது நல்லடக்கத்தின்போது, ‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘இந்திய ராணுவத்தை வணங்குகிறோம்’ போன்ற முழக்கங்கள் எழுந்தன.

மேலும், இந்திய தேசிய கீதத்துடன், நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தேசிய கீதமும்(கடந்த 1950ம் ஆண்டு எழுதப்பட்டது) ஒலிக்கப்பட்டது.

அந்த சவ அடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதீய ஜனதாவின் தேசிய பொதுச் செயலாளர், பின்னர், ‘லடாக்கில் நமது எல்லையைக் காப்பதற்காக ஒரு திபெத்தியன் தன் உயிரை ஈந்துள்ளார்’ என்று ட்வீட் பதிந்து, பின்னர் அதை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]