சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் என்று பல குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடிவந்தார் .
இதனிடையே மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை என மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார் .
இதற்கு கங்கனா ‘‘நான் மும்பை வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.
வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு வரும் கங்கனா ரணாவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதித்துள்ளது .
இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பிரபலங்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப எக்ஸ், ஒய், இசட் பிரிவுகளில் காவல் பாதுகாப்பு வழங்கப்படும்.
கங்கனாவின் இல்லத்திலும் அவர் வெளியே செல்லும்போதும் ஒய் பிளஸ் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் 10 அல்லது 11 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.