இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமை யால், திருக்குறுள் இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.
இதுவரை உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. 18இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இதுவரை 107க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணா நிதி, சாலமன் பாப்பையா உட்பட பல தமிழ் அறிஞர்கள் அவர்களுக்கு உரிய பாணியில் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும்.
ஏற்கனவே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் முயற்சியில், சீனாவின் மான்ட்ரின் மொழியில், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ.41.70 லட்சம் நிதி ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக திருக்குறளை சீன மொழியில் மொழிப் பெயர்த்து புத்தகமாக வெளியிட 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த சீன மொழி பெயர்ப்புப் பணியும் சீனா கவிஞர் யூசியிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் 2014-ல் அச்சுப் பணிகள் நிறைவடைந்து புத்தக வடிவில் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.