டெல்லி: உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் என குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, அதுதொடர்பாக வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான ஜிடிபி (Gross domestic product) என்று கூறப்படுகிறது. ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒட்டு மொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் பெரும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -23.9சதவீதம் சுருங்கியிருப்பதாக இந்திய அரசு ஆகஸ்டு 31ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர் கள் மோடி அரசின் திறமையின்மையே காரணம் என குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஜிடிபி குறைவுக்கு காரணம் என்ன என்பது குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாற்று சரிவுக்கு மற்றொரு முக்கிய காரணம் மோடி அரசாங்கத் தின் கபார் சிங் வரி (ஜிஎஸ்டி) ஆகும்.
உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம்.
சிறு தொழில்கள் மற்றும் மாநிலங்களின் நிதி நிலையை ஜிஎஸ்டி வீணாக்கிவிட்டது.
மில்லியன் கணக்கான சிறு வணிகங்கள்,
மில்லியன் கணக்கான வேலைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம்,
மாநிலங்களின் பொருளாதார நிலை.
இது போன்ற ஏராளமானவற்றையும் ஜிஎஸ்டி வீணாக்கி உள்ளது.
ஜிஎஸ்டி என்றால் பொருளாதார அபோகாலிப்ஸ். பாஜகவின் ஜிஎஸ்டி முற்றிலும் வித்தியாச மானது அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் ஜிஎஸ்டி எனகூறியுள்ளார்.
மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்