அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் நள்ளிர்வில் தீப்பற்றி எரிந்தது. இது அந்த பகுதியில் பதற்றத்தையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் பழமையான லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினசரி ஏராளமானோவர் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில், தளர்வு அறிவிப்பு காரணமாக கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட் டிருந்த கோவில் தேர்வி, நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தேர் முழுவதும் எரிந்துவிட்டது.
கோவிலுக்கு சொந்தமான தேர், தீப்பிடித்தது எப்படி, சமூக விரோதிகள் தீ வைத்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும், பக்தர்களிடையே அதிர்ச்சியுயையும் ஏற்படுத்தி உள்ளது.