சென்னை: வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வு 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளது.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, வருகிற 21ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்தார்.