நியூசிலாந்து:
நியூசிலாந்தில் ஒருவர் 8,150 நியூசிலாந்து டாலர்கள் கொடுத்து ஒரே ஒரு செடியை மட்டும் வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது 4,00,690 ரூபாய் ஆகும்.
இது மினிமா அல்லது வெரிகேட் மினிமா என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான ஒரு செடியாகும். இது ட்ரேட் மீ என்ற வர்த்தக தளத்தில் ஏலம் விடப்பட்டு மிகப் பெரும் விலைக்கு விற்கப்பட்டடுள்ளது. இந்த செடியில் நான்கு இலைகள் மட்டுமே உள்ளன.
இந்தச் செடியை சுமார் 62 பேர் எழுத்தில் கேட்டிருந்தனர், மேலும் ஸ்டஃப் நியூசிலாந்தின் கூற்றுப்படி இது இணையத்தளத்தில் இதுவரை இல்லாத விலைக்கு விற்கப்பட்ட அரிதான வீட்டு தாவரமாகும்.
இந்தச் செடிக்யை இணையதளத்தில் விற்கும்போது ட்ரேட்மீ வர்த்தக தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம்: மிகவும் அரிய வகைத் தாவரமான இந்தச் செடியின் 4 இலைகளில் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும் என்று மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
ஸ்டஃப் நியூசிலாந்தின் கூற்றுப்படி 4 இலைகளைக் கொண்ட இந்த செடி மிகவும் மெதுவாக வளரக்கூடியது, அதனால்தான் அது தோட்டக் கலை வல்லுனர்களால் தேடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செடியை வாங்கிய அந்த நபர் தெரிவித்திருந்ததாவது: நாங்கள் ஒரு வெப்பமண்டலக் தோட்டத்தை உருவாக்க உள்ளோம், இது பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு சொர்க்கமாக அமையும். ஆகையால் நாங்கள் மிகவும் அரிதான செடிகளை எல்லாம் வாங்கி வளர்க்கிறோம். ஆனால் உண்மையில் நாங்கள் செலுத்த விரும்பியதை விட இதன் விலை மிகவும் அதிகம். ஆனால் முடிவில் அரிதான பொருட்களை மிக எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அந்த பொருட்களின் மதிப்பை எடை போட முடியாது, அது விலைமதிப்பில்லாதது ஆகவே நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.