சென்னை: திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
4ம் கட்ட தளர்வுகளின் படி, தமிழகத்தில் பேருந்துகள், வணிகவளாகங்கள், மால்கள், பூங்காக்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் படப்பிடிப்புக்கு அனுமதி தரப்பட்டு இருந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
அதனால் திரையுலகத்தினரும், திரைத்துறையினரும் ஏமாற்றம் அடைந்தனர். இந் நிலையில், திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும். நாளை திரையரங்கு உரிமையாளர்களுடன் முதலமைச்சரை சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.