ஆசிரியப் பெருமக்களே !

 

வண்ண மலர்கள்

  உங்களிடம் ஓடி வரும் !

ஓவியங்கள் உயிர்பெற்று

  உங்களிடம் பேசிடும் !

தென்றல் கை கூப்பிடும்

  தினந்தோறும் உம்மிடம் !

விண்மீன்கள் சிரித்திடும்

  விளையாடியவாறே !

பழக்கலவை உம்மிடம்

  பேசிடும் பாசமாக !

குயில்கள் கூட்டம் ஒன்றாக

  கூவிடும் உம்மிடம் !

எந்த மனிதனுக்கும் வாய்க்காத

  இந்த வாய்ப்பு உமக்கு மட்டுமே !

 

எங்கள் ஏணிப்படிகளே !

 

உம் வார்த்தைகளே

  எம் வாழ்க்கையாகிறது !

உம் அணுகுமுறையே

  எம் வாழ்க்கை அனுபவமாகிறது !

உங்கள் கரும்பலகையே

  எங்கள் கர்மாவைத் தீர்மானிக்கிறது !

உங்கள் எழுதுகோலே

  எங்கள் முன்னேற்ற எழுச்சியாகிறது !

உங்கள் கட்டளைகளே

  எங்களைப் பட்டை தீட்டுகிறது !

உங்கள் ஆழ்ந்த சிந்தனையே

  எங்கள் தாழ்வு மனப்பான்மையை மாற்றுகிறது !

நீங்கள் சொல்லும் கதைகளே

  எங்கள் வாழ்வின் கனவுகள் !

உங்கள் உயர்ந்த எண்ணங்களே

  எங்கள் முன்னேற்ற ஏணிப்படிகளாகும் !

உங்கள் பாதச்சுவடுகளே

  எங்கள் பாதைகளின் முகவரி !

உங்கள் அறிவுக்குன்றின் மேல்

  எங்களை அகல் விளக்காக ஏற்றுகிறீர்கள் !

உங்கள் வாழ்க்கை முழுவதும்

  எங்களுக்கு வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள் !

குருவின் வாழ்த்துக்களே எங்கள்

  குறைவில்லா வாழ்க்கையின் ஆரம்பம் !

வகுப்பறையின் தெய்வங்களே

  உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் !

கருப்பை மட்டுமல்ல மனப்பையும்

  குழந்தைகளை காத்திடும் எனக் கூறும்

  காப்பாளர்களே ! நீவிர் வாழ்க !

பா. தேவிமயில் குமார்