அடிஸ்அபாடா: மதத்தை அரசிலிருந்து பிரிப்பது என்ற முடிவை மேற்கொண்டு ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசு கையெழுத்திட்டதன் மூலம், சூடான் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமிய சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மற்றும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்தல்.அஜிஸ் அல்-ஹிலு ஆகியோருக்கிடையில் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
எத்தியோபிய நாட்டின் தலைநகர் அடிஸ்அபாடாவில் இந்த சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
“சூடான் ஒரு குடியரசு நாடாக மாறுவதற்கும், அங்குள்ள அனைத்துக் குடிமக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு, அவர்களின் முடிவெடுக்கும் உரிமை மதிக்கப்படவும் இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தியுள்ளது” என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.