கடவுள்களின் திருவுருவச் சிலைகளுக்கு விக்ரகம் என்பது பெயர்.
நாம் வழிபடும் பெரும்பாலான கோவில்களின் மூலவராக காட்சி தரும், கடவுள்களின் திருவுருவச் சிலைகள் பெரும்பாலும் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை. சில இடங்களில் மட்டும் பஞ்சலோகங்களால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கும். கிராமப்புற கோவில்களில், மற்ற உலோகங்கள், மரம் ,மண், சுதை போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும்
திருக்கோவில்களில் கருவறையில் நிலையாக இருக்கும் கடவுளின் திருவுருவம் கருங்கல்லாலும் (மூலவர் எனப்படுவார்), உற்சவக்காலங்களில் கோவிலுக்கு வெளியே ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடியத் திருவுருவம், பஞ்சலோகம் எனப்படும் வெள்ளி,தங்கம், துத்தநாகம்,செம்பு,ஈயம் ஆகியவற்றின் கலப்பு உலோகத்தாலும்(உற்சவர் எனப்படுவார்) வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்றபடி இடம், வசதிக்குத் தக்கவாறு பல்வேறு பொருட்களால் விக்கிரகங்கள் உருவாக்கப் படுகின்றன.
அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட, கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு வீரியமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையும் கருங்கல்லுக்கு உண்டு.
கருங்கல்லில், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது ஐம்பூதங்களின் சக்தி வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.
நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.
நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.
காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.
எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் இருந்து வெளியாகும் சக்தியானது, நமக்கு உடல்நலத்தை பேணுகிறது. நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
திருவாரூர், திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இந்தகோவில் முழுவதும் கருங்கல்லினால் கட்டப்பட்டது.
இதுபோன்ற காரணங்களினால் தான் முன்னோர்கள் இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்துள்ளது.
இதுமட்டுமின்றி, அந்த கருங்கல்லான விக்கிரகத்துக்கு, அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன.
அதன்ல், கோவிலில் உள்ள மூலவரை வணக்கும் அனைவருக்கும், உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன. அ