இந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், விபத்தில், ஆலை உரிமை யாளர் காந்திமதியும் பலியானதாக கூறப்படுகிறது.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே. குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை, பட்டாசு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதாலும், அங்குள்ள வெடிகள் வெடித்து சிதறியதால், கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால், அங்கு வேலை செய்தவர்கள் அனைவரும் தீயில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், விபத்தில், ஆலை உரிமை யாளர் காந்திமதியும் பலியானதாக கூறப்படுகிறது.