டெல்லி: லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலியாக, மக்கள் தங்கத்தை வாங்குவதை குறைத்து, தங்கள் குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமான கட்டுப்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மக்களை பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்து, குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர்.
இந்த விவரத்தை வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் அறிக்கையின் வாயிலாக தெரிவித்து உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள், கொரோனா தொற்று நோய் மற்றும் அரசியல் நிலவரம் காரணமாக தங்கத்துக்கு மாறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள் மற்றும் வர்த்தக நிதிகளை செலவிட்டு வருகின்றனர் என்று வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் சிறு தொழில்கள் ஆகியவை லாக்டவுன் காரணமாக, கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தியர்களை தங்கத்தை விற்கவோ அல்லது அதற்கு எதிராக கடன் வாங்கவோ காரணமாக அமைந்தது என்று வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசிப்பவர், தனது குடும்ப நகைகளை ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்கு பணம் செலுத்துவதற்காக விற்றார். அவர் கூறுகையில், விரைவான பணத்தை ஏற்பாடு செய்வதற்கு வேறு வழியில்லை, அது எங்களுக்கு உண்மையிலேயே தேவை என்றார்.
உலகின் தங்க நுகர்வோர்கள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளனர். இந்தியாவில் நகை தேவை ஜூன் முதல் மூன்று மாதங்களில் 74 சதவீதம் சரிந்தது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.