சென்னை: கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகள் நடைமுறையில் உள்ளன, . மக்களின் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 7ம் தேதி ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி உள்ளன.
இந் நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை – கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் – செங்கோட்டை மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.