துபாய்: ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால், மும்பை அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றுதான் முதலில் தகவல்கள் வந்தன. ஆனால், தற்போது தனது முழு குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டியிருப்பதால், தொடரிலிருந்து முழுமையாக அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
“தனது குடும்பத்தினருடன் வீட்டில் தங்கியிருந்து நேரம் செலவழிப்பதற்காக மலிங்கா இத்தொடரில் பங்கேற்கவில்லை என்று மும்பை அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மலிங்கா ஒரு பவுலிங் ஜாம்பவான். அவர், மும்பை அணியின் தூண்களில் ஒருவர்” என்றுள்ளார் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி.
மலிங்கா பங்கேற்கவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக மும்பை அணியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட்டிசன் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.