திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 1,000 டிக்கெட் கூடுதலாக உயர்த்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி ஜூன், 11 முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  முதலில் ஆன்லைன் மூலம் நாள் ஒன்றுக்கு, 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந் நிலையில், இந்த எண்ணிக்கை இப்போது 9,000 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பூதேவி காம்பளக்சில், 10 மையங்களை ஏற்படுத்தி ஒருநாளைக்கு முன்னதாக பெற்று கொள்ளும் வகையில், 3000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 1 மணி நேரத்திற்கு, 100 என நாள் ஒன்றுக்கு, 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதள முன்பதிவில் கூடுதலாக வெளியிட்டுள்ளது.  இதன் மூலம் 10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

[youtube-feed feed=1]