சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நாளை மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இரட்டை வாக்காளர்களின் பதிவுகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும்.
Patrikai.com official YouTube Channel